சிவகங்கை: ஏப்:09
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 30 – அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார் . மாவட்டத் தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது . விரல் ரேகை பதிவு , ஆதார் சரிபார்ப்பு
40 % மீண்டும் நடைமுறைப்படுத்துதல் , இணையதள சேவையை மேம்படுத்துதல் . தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் உள்ள எடைத்தராசையும் அலுவலகத்திலுள்ள கணினியுடன் இணைக்கப்பட வேண்டும் . பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் . சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் . கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் . ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஊதிய மாற்றக் குழு அமைத்து 9 வது மாநில ஊதிய மாற்றக் குழுவில் சேர்க்கப்பட வேண்டும் . இது போக நிலுவையில் உள்ள 30 – அம்சக் கோரிக்கை குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் , மாவட்டச் செயலாளர் திருஞானம் , பொருளாளர் கௌரி உள்பட சங்க நிர்வாகிகள் கோரிக்கை குறித்து பேசினார்கள்.இது குறித்து மாவட்ட தலைவர் கூறியதாவது: தமிழக அரசு நியாயவிலை கடை ஊழியர்களின் 30-அம்ச கோரிக்கை மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.மற்றும் 9 வது மாநில ஊதிய மாற்ற குழுவில் சேர்க்க வேண்டும்.நியாய விலை கடை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.