தஞ்சாவூர், செப்.7
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரிகாலன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவகுருநாதன், சத்துணவு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் 100 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வேறு மாநில, வெளிமாவட்ட, வெளி ஊர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக கூடுதலாக 10 சதவீதம் அத்தியாவசிய பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உரிய காலத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் வரும் லாரிகளில் நடமாட்ட பணியாளர் மற்றும் எடை தராசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களின் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நிர்வாகிகள் பேராவூரணி ராஜேந்திரன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், தஞ்சாவூர் சாமிநாதன், திருவிடைமருதூர் ரமணி, பாபநாசம் தாமரைச் செல்வன், பூதலூர் தமிழரசன், மகளிர் அணி மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.