திண்டுக்கல் மாவட்டத்தில் 33 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல் அபிராமி லயன்ஸ் சங்கம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமானது வெள்ளோடு நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமினை அபிராமி லயன்ஸ் சங்க தலைவர் அசோக் குமார் செயலாளர் ஸ்ரீராம் பொருளாளர் சட்டத்தின் பார்வை சரவணன் மற்றும் வெள்ளோடு ஊர் நாட்டாமை யாக்கோப், மணியர் அருளானந்தம், ஊர் நிர்வாகிகள் யாக்கோப், செல்வராஜ், புண்ணியகோடி, ஜெயசுந்தர், ஆரோக்கியதாஸ், நர்சரி அமல்ராஜ், மார்ட்டின் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் நீரிழிவு நோயினால் விழி திரையில் வரக்கூடிய விழித்திரை பாதிப்புக்கு லேசர் சிகிச்சை, கண்ணீர் அழுத்த நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் நரசிங்கபுரம், கல்லுப்பட்டி, யாகப்பன்பட்டி, தண்டார்பட்டி, வெள்ளோடு, கோம்பை, உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்