திருப்பூர் ஜூலை:8
வீரபாண்டியில்
கண் பரிசோதனை முகாமை நடத்தியது. விழுதுகள் திட்ட மேலாளர் வி.கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். விழுதுகள் திட்ட மேலாளர் கே.சந்திரா தலைமை வகித்தார். லோட்டஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழு பங்கேற்றார்கள். முதுநிலை கண் மருத்துவர் எஸ்.புவியரசி, பார்வை மருத்துவர்கள் பி.எஸ் சௌஜன்யா,
ஆர். சஃபா, முத்து கணேஷ், மேலாளர் பெருமாள்சாமி ஆகியோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு அளித்தார்கள்.
ஆரோக்கியமான கண்கள் மற்றும் பார்வைக்கு மாற்றியமைக்க வேண்டிய வாழ்க்கை முறை பற்றி பேசினார்கள். கலந்து கொண்ட பொது மக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். இலவச இரத்த அழுத்த மற்றும் சக்கரை பரிசோதனையும் செய்யப்பட்டது. விழுதுகள் சிறப்பு பள்ளி கீதா நன்றி கூறினார்.
இதில், தினக்கூலி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.