சிவகங்கை. ஜன:30
சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் தொடர்ந்து நடக்கும் உச்சகட்ட முறைகேடுகள்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் இன்னும் வித்தியாசமானவை. ரூ,145 விலையுள்ள குவாட்டர் ரூ.180முதல்
ரூ200 வரை கள்ளச் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது .
அதிக விலையாக ரூ,180 க்கு வாங்கியும் அதில் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். என மதுப் பிரியர்கள் குற்றச்சாட்டும் வைக்கின்றனர் .
குன்றக்குடி போலீஸ் சரகத்தில் உள்ள கடை எண் 7532 இல் இருக்கும் சரக்குகளை அதன் விற்பனையாளர் கள்ளச் சந்தைக்கு தாராளமாக கொடுத்து வந்ததில் ஒருவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது விற்பனையாளராக பணி செய்பவரும் அதே பாணியில் கள்ளச் சந்தைக்கு தாராளமாக சரக்குகளை கொடுத்து வருகிறார். அவர் மீது ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , விற்பனையாளரின் மனைவி நகர்மன்ற உறுப்பினராக இருப்பதாலா எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் . மதுபானங்களின் வகைகளான பிராண்டு கம்பெனிகள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை சரி செய்து மக்கள் அதிகம் விரும்பாத சரக்குகளை அதிகளவில் இறக்குமதி செய்கின்றனர்.
இந்த மதுபாட்டில்களை மாவட்ட மேலாளர் வலுக்கட்டாயமாக விற்பனையாளர்களுக்கு அனுப்பி கொள்முதல் முறைகேடுகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர் . இது போக மாவட்ட மேலாளரின் டிரைவர் மூலம் ஒவ்வொரு கடைகளுக்கும் மாத மாமுல் தாராளமாக வசூலிக்கப்படுவதாக சிவகங்கையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விற்பனையாளர்களின் இடமாறுதல்கள் , பணி நீக்கத்திற்குப் பிறகு மீண்டும் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களிடம் மேலாளரின் டிரைவர் மூலம் வசூல் வேட்டையை கச்சிதமாக நடத்தி முடிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் , தொழிற்சங்க நிர்வாகிகளும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் .
மொத்தத்தில் சிவகங்கை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் முறைகேடுகள் , விதிமீறல்கள் , ஊழல்கள் தாராளமாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் .