திண்டுக்கல்
ஜூலை : 6
திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, I-STEM நோடல் மையத்துடன் இணைந்து, I-STEM ஆபரேட்டர் கற்பித்தல் மற்றும் பயிற்சி (OTT) திட்டம், 2024 – ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 – ஆம் தேதிகளில் ஆய்வக ஆபரேட்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான பயிற்சியை “I-STEM போர்ட்டலில் PSNACET இன் சோதனை மற்றும் அளவீட்டு வசதிகள்” என்ற தலைப்பின் கீழ் வழங்கியது.
இந்த தொடக்க விழாவின் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பேராசிரியர் மற்றும் இயக்குநர்- ஆய்வு மையம் டாக்டர்.சி. உமாராணி, I-STEM முதன்மை அதிகாரி டாக்டர்.ஹரிலால் பாஸ்கர், I-STEM தொழில் நுட்ப மேலாளர் எஸ். செந்தில் முருகன், உடன் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.டி.வாசுதேவன் ,டீன்- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு டாக்டர்.என்.ஜவஹர் ,துறை தலைவர் /BME டாக்டர்.வி.ஜெயந்தி , பேராசிரியர்/ ECE
டாக்டர்.கே.மீனா என்ற ஜெயந்தி , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பாளர்கள் பின்வரும் உபகரணங்களைப் பயன்படுதுவதன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. (Vector Network Analyzer, Robot design kit, IoT project development kit, Gluteal Pressure Measurement, Electromyography system and UV Spectrophotometer) (வெக்டர் நெட்வொர்க் அனலைசர், ரோபோ டிசைன் கிட், ஐஓடி ப்ராஜெக்ட் டெவலப்மெண்ட் கிட், குளுடீல் பிரஷர் மெஷர்மென்ட், எலக்ட்ரோமோகிராஃபி சிஸ்டம் மற்றும் யுவி ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்) பட்டயப் படிப்பு, ஆய்வக உதவியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, உயிரி மருத்துவ பொறியியல் மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து வந்த மொத்தம் 100- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.