மார்ச்: 21
திருப்பூர் வடக்கு ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப்
J முகமது ரபி அவர்களின் ஆணைக்கிணங்க, திருப்பூர் ஐக்கிய ஜமாத் வடக்கு மாவட்ட செயலாளர் A.முகமது ஹசன், பொருளாளர் ஜனாப்.அஜ்மத்துல்லா அவர்களும் மற்றும் துணைத் தலைவர்கள் முபாரக் பாய் மற்றும் சித்திக் பாஷா அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் திரு அருட்தந்தை ஜோ அருண் அவர்களையும் மற்றும் பல சமய நல்லுறவு நிறுவனர் மற்றும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் உறுப்பினர் அன்பு சகோதரர்
J முகமது ரபி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து, திருப்பூர் ஐக்கிய ஜமாத் வடக்குப் பகுதியில் பிரதான கோரிக்கையான புதிதாக இரண்டு அடக்கஸ்தலம் அமைக்க, இடம் வேண்டும் என்றும். அவிநாசி சாலை எஸ்ஏபி கபரஸ்தானுக்கு மண் மாற்றி , மின்விளக்கு, சிமெண்ட் சாலை ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கையும், மற்றும் திருப்பூர் வடக்கு பகுதி பள்ளிவாசல் உள்ள பிரச்சனைகளும் மற்றும் பள்ளிவாசலுக்கு விதிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை ,
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.