ராமநாதபுரம், பிப்.11-
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் இருந்து பனை தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி மதுரை ஆகிய மாவட்டங்கள் நிறைவு பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள் கோவில் கிராமத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு பனைமரம் தொழிலாளிகள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு, தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டார். பின்னர், அவர் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எனக்கு பனைமர தொழிலாளிகள் நலநலவாரிய தலைவர் பொறுப்பை வழங்கினார்.
நான் பொறுப்பு ஏற்று கொண்ட பின்னர் இதுவரை 15 ஆயிரம் உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்த்துள்ளோம். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது பதநீர் சீசன் தொடங்கி இருக்கிறது. பனைத்தொழிலாளர்கள் காலையில் பதநீரை இறக்கி விற்பனை செய்வதோடு, கருப்பட்டி தயாரிக்கின்றனர். மீதமுள்ள பதநீர் மாலையில் புளித்து கள்ளாக மாறிவிடுகிறது.
இதனால் கள்ளச்சாராய தடுப்புசட்டத்தில் பனை தொழிலாளர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர். விருதுநகரில் 15 பேர் சிறையில் இருக்கின்றனர். இதன் காரணமாக பனைத் தொழிலாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். கள்ளச்சாராய தடுப்புச் சட்டத்தில் இருந்து பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதற்காக மாவட்டந்தோறும் சென்று தொழிலாளர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்று கூறினார்.
அதன் பின்னர் நலவாரியம்
தலைவர் பனைமர தொழிலாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். பொருளாளர் கண்ணன் ,தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தொழிற்சங்கச் செயலர் ஜெபராஜ் டேவிட் ,தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை தலைவர் வேல்முருகன் , மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன், மாணவரணி மாவட்ட செயலாளர் ராகுல் ,மாவட்ட தலைவர் அஸ்வின், துணைத் தலைவர் முனிராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜார்ஜ் ,வர்த்தக அணி செயலாளர் ரஞ்சித் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான், திவாகர் ,ஜெகன் தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி ,மகேஸ்வரன், நந்தகுமார், மற்றும் கிராம நிர்வாகிகள் உறவின்முறை தலைவர்கள் பொதுமக்கள் பனைமர தொழிலாளர்கள் திரளாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.