தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் தாமரை செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர் மு .க.
ஸ்டாலின் 72 – வது பிறந்தநாள் விழாவை எவ்வாறு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதை கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நாட்டான் மாது, மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, பொன் மகேஸ்வரன், கௌதம், உதயசூரியன் உட்பட மாநில, மாவட்ட ,நகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.