கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரும், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாக நீதிபதியுமான நீதியரசர் .ஜே.சத்திய நாராயண பிரசாத் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற கட்டிட பணிகள், அடிப்படை தேவைகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி தl.எம்.சுமதிசாய் பிரியா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., ஆகியோருடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், சூளகிரி, ஓசூரில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடம் தேர்வு, மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள், நீதிமன்ற வளாகங்களில் மின்வசதி, கழிப்பறை வசதிகள், சாய்வு தளம் உள்ளிட்ட பணிகள் மறு சீரமைப்பு மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை விரைவாக துவக்க அலுவலர்களுக்கு மாண்புமிகு நீதியரசர் அவர்கள் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் அனைத்து வழங்கறிஞர் சங்கங்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் .சுவாமிநாதன், மற்றும் நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.