தென்தாமரைகுளம்., நவ. 20.
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவி மற்றும் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் வட்ட அளவில் குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் திருவட்டார் எக்சல் சென்ட்ரல் பள்ளியில் வைத்து நடைபெற்றது. 17 வயதிற்குட்பட்ட பிரிவில் இரட்டை கம்பு வீச்சு பெண்கள் பிரிவில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர் தருண் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி மற்றும் மாணவரை பள்ளியின் தாளாளர் கால்வின், தலைமை ஆசிரியை பிரீத்தா ரிச்சர்ட் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.