திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. குத்தாலம் திமுக அலுவலகத்தில் உள்ள கோ.சி.மணியின் உருவச்சிலைக்கு திமுகவினர் குத்தாலம் கடைவீதியில் இருந்து பேரணியாக புறப்பட்டுச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நகர திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா பகுத்தறிவு மன்றம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட கோ.சி.மணியின் உருவப்படத்துக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, அமைச்சர் கோ.சி.மணி பிறந்த ஊரான மேக்கிரிமங்கலம் கிராமத்திலும் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் ,செல்வமணி, கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர்,குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், குத்தாலம் நகர செயலாளர் சம்சுதீன்,மண்டல தகவல் தொழில்நுட்ப அடி பொறுப்பாளர் ஸ்ரீதர், முத்தால மூர்த்தி பெருந்தலைவர் மகேந்திரன், நகர மன்ற தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன், இளையபெருமாள், ஏ ஆர் ராஜா, மங்கை சங்கர், அமிர்த விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.