சென்னை, நவ- 02 ,,
பக்கவாத நோய்க்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சிம்ஸ் மருத்துவமனையில் கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் , மற்றும் மருத்து பணியாளர்கள் இடையே நடைபெற்ற “ஸ்ட்ரைக் அகென்ஸ்ட் ஸ்ட்ரோக்” கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெற்றி பெற்றது. மேலும் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டது. பிரேக்ஸ் இந்தியா இரண்டாவது ரன்னர் -அப் ஆக தேர்வு செய்யப்பட்டது
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:-
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமையாக உள்ளது.
மேலும் பக்கவாதம் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்க கூடியது.
ஆகவே ஆரோக்கியமான உடல் செயல்பாடு மற்றும் உடல் தகுதியை தொடர்ந்து பாரமரிப்பு மூலம் இந்த பக்கவாதத்தை தடுக்க முடியும். அதனால் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியை கடைப்பிடிக்க வேண்டும். பக்கவாத அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் எஸ்.ஆர்.குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து,
நரம்பியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர். சுரேஷ்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.