கரூர் – ஆகஸ்ட் – 11
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆண்டான் கோவில் மேற்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டான் கோவில் மேற்கு ஆத்தூர் பிரிவு திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு ஆண்டாள் கோவில் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.எம். பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்பிகை செந்தில் ஜோதி கிளைக் கழகச் செயலாளர் மணிகண்டன் கார்த்திக் சண்முகம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.