கரூர் மாவட்டம் டிசம்பர் – 7
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தரகம்பட்டி பேருந்து நிலையம் முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 68 – வது நினைவு தினத்தை முன்னிட்டு கடவூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர் இதில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழ. குமணன் தலைமையில் நடைபெற்றது. முன்னிலையில், மாவட்ட பொருளாளர் மரு. அவிநாசி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கடவூர் ராமச்சந்திரன், கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் மா. முத்து வளவன். குளக்காரன்பட்டி சிவசக்தி. கடவூர் வடிவேல். மணிமாறன். முத்தகவுண்டம்பட்டி ராகவன் ஆகியோர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். அம்பேத்கரின் தியாகத்தை போற்றிடும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விடுதலை சிறுத்தைக் கட்சியினர் மகளிர் அணி ஆகியோர் நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் நினைவு தினத்தை அனுசரித்தனர். பின்னர் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கலந்து கொண்டனர்.