ஜாக்டோ ஜியோ ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார்!
ராமநாதபுரம், பிப்.16-
ஜாக்டோ-ஜியோ இராமநாதபுரம் மாவட்ட அமைப்பு சார்பில் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதல், சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, இடைநிலை, உடற்கல்வி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைதல்,90 சதவீத தொடக்கநிலை ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களை பாதிக்கின்ற G.O 243 ஐ உடனடியாக ரத்து செய்தல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.*
இராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சிவபாலன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.*
அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம்,ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முனியசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிச்சாமி, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினர்.*
அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நஜுமுதீன் போராட்ட நிறைவுறையாற்றினார்.*