ஈரோடு
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம் பி பி எஸ், பி டி எஸ் உட்பட இளநிலை மருத்துவர் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5 71 நகரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு நகரங்களில் அமைக்கப்பட்ட 4, 500 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. 9.96 லட்சம் மாணவர்கள் 13. 31 லட்சம் மாணவிகள், 17 திருநங்கைகள் தேர்வு எழுதினார். இதில் 13, 16,268 பேர் வெற்றி பெற்று உள்ளார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்ணிற்கு 720 பெற்றுள்ளார்கள். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் 720 மதிப்பெண் பெற்று
ஆகாஷ் எஜுகேஷன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆதித்யா குமார் பாண்டா 720 மதிப்பெண் பெற்று சாதனைப்படுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆகாஷ் எஜுகேஷன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் படித்த வினோத் தங்கராஜ் சேதுபதி என்ற மாணவன் அகில இந்திய அளவில் நீட் தேர்வில் 715 மதிப்பெண்களை பெற்று 128 வது இடத்தை பிடித்தார் அவரை பாராட்டி, கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஈரோட்டில் பயிற்சி பெற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு தமிழ்நாடு துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார் அப்போது அவர் கூறும் போது ஆகாஷ் கல்வி நிறுவனம்
4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகளுடன் 315 மையங்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறது என கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேலாளர் சங்கர் குரு, ஈரோடு பகுதி விற்பனை தலைவர் சக்திவேல் கணேஷ், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.