ஈரோடு,செப் .30
ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
இதில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் கீழ் நடந்த இந்த போட்டியில் 21 ஆயிரத்து 962 பேர் கலந்துகொண்டு விளையாடினர் .இந்த போட்டியில் 2460 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 708 விளையாட்டு வீரர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் செய்திருந்தார்.