ராமநாதபுரம், ஜன.12-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா
பட்டிணம்தகாத்தான் ஊராட்சியில் நடைபெற்றது.
பொங்கல் விழாவில் அரசின் பொங்கல் தொகுப்பு மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவீன் வழங்கினார்.
உடன் கிளைக்கழக செயலாளர்கள் ராஜமோகன், லோகநாதன், நாகலிங்கம், எபினேசர், அசரப் அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.