ஆரல்வாய்மொழி, ஜன.16:
ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் இணைந்து
நடத்திய சமத்துவப் பொங்கல் விழா
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்
என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு
பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்
ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 18 பனைகளில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் இடும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கலிடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்,ஏழை எளியவர்கள் உட்பட 100 பேருக்கு பொங்கல் பரிசு பொருட்களாக தலா 5 கிலோ அரிசி, கரும்பு ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
தை பிறந்தால் வழி பிறக்கும். அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ இறைவன் அருள்புரிவார். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில் பேரூராட்சி துணைத் தலைவர் சுதாபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் சுடலையாண்டிபிள்ளை, வள்ளியம்மாள், சுகுணாள், நாகலெட்சுமி, சங்கீதா, இசக்கியம்மாள், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஷேக், தோவாளை தெற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் தர்மர், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிரம்மநாயகம், தாழக்குடி முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரோகிணி அய்யப்பன், ஆரல் பேரூர் கழக அவைத்தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.