கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தே. மதியழகன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் புதிய மண்பானையில் பச்சை அரிசி முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் உள்ளிட்ட பொருட்களால் பொங்கல் வைத்து மா இலை செங்கரும்பு தோரணங்கள் கட்டி படையிலிட்டு கொண்டாடப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மதியழகன் எம் எல்.ஏ.விற்க்கு வாழ்த்து தெரிவித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.