பரமக்குடி,ஜன. 13 :
பரமக்குடியில் செயல்பட்டு வரும் அசுகரன் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அசுகரன் விளையாட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் காலை மற்றும் மாலை இருவேளைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அசுகரன் விளையாட்டு கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கிராமிய விளையாட்டு போட்டிகள் ஆண் ,பெண் இருவருக்கும் தனித்தனியாக பானை உடைத்தல், கயிறு இழுத்தல், லக்கி கானல், மியூசிக் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.பெண்கள் கும்மியாட்டம் ஆடி அசத்தினர். பின் விளையாட்டு வீரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மேலும் தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கபட்டது.சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை அசுகரன் விளையாட்டுக்கழக பயிற்சியாளர் அருண் செய்திருந்தார்.
பட விளக்கம்
பரமக்குடி அசுகரன் விளையாட்டுக் கழக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.