தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி பழையகாயல் ஊராட்சில் வைத்து நடைபெற்றது. புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேஸ்குமார்,சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக பழையகாயல் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வகுமார், துணைத்தலைவர் சுவிட்லின் தேவி, வார்டு உறுப்பினர் ஸ்டாரா, பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் தனலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் எஸ்.வசந்தாமணி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியானது தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலை, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, பழையகாயல் வடக்கு வீதி, பரிபூரண அன்னை ஆலயம் வழியாக பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள், பட்டாதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசியர்கள், நூற்று இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் மரம் வளர்த்து மண்ணைக் காப்போம், சுற்றுச்சூழலை பாதுகாத்து காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவோம், நெகிழியை ஒழித்து மீண்டும் மஞ்சல் பையை பயன் படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஊராட்சி மன்றச் செயலர் இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.