நாகர்கோவில் செப் 9
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கீரிப்பாறை,சீதப்பால், தெள்ளாந்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாழை பயிரிடப்பட்டுள்ளது,இப்பகுதியில் அவ்வப்பொழுது வனவிலங்குகள் உணவுக்காகவும், தண்ணீர் அருந்துவதற்காகவும் இறங்கி வருவது உண்டு. அப்பகுதிகளில் காட்டு யானை,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் பொதுமக்களை அச்சுறுத்துவதும் உண்டு,இந்நிலையில் கடந்த வாரமும் யானை கூட்டம் அப்பகுதியில் உள்ள வாழை தோட்டத்தை சேதப்படுத்தியது. அதேபோல் தெள்ளாந்தி ஆனைமலை பகுதியில் உள்ள வாழை தோட்டத்துக்குள் புகுந்த காற்று யானைகள் கூட்டம் சுமார் 3000 வாழை பயிர்களை சேதப்படுத்தி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் கணவன் மனைவியாக விவசாயி தங்கள் பயிரிட்ட வாழைகளை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி உள்ளதால் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை தெரிவித்துள்ளனர்.