கீழக்கரை மே 24-
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான சர்வே எண் 502,504 பகுதிகளில் எந்த ஒரு ஆக்கிரமிப் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ளது
தடை செய்யப்பட்ட பகுதிகளில் பழக்கடை வளையல் கடை அல்வா கடைகள் இருந்தன இந்த கடைகளுக்கு ஒரு சிலர் மறைமுகமாக 30ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அட்வான்ஸ் ஆக பெற்றுக்கொண்டு தினசரி 300 முதல் 500 வரை வசூல் செய்து வந்தனர் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் தடை செய்யப்பட்ட சர்வே எண் 502 504 நேற்று ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை அகற்றினார் மண்டல துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை நில அளவை ஆய்வாளர் வினோத் குமார்
முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நவநீத கிருஷ்ணன் உதவி பொறியாளர் சாயல்குடி செல்வக் கணபதி சாலை ஆய்வாளர் லட்சுமணன் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் மாயா குளம் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் புள்ளந்தை நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஏர்வாடி தர்கா காவல்துறை ஆய்வாளர் கலாராணி சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வருவாய்த்துறை பணியாளர்கள்,சாலை பணியாளர்கள், ஏர்வாடி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.