சுசீந்திரம் அக் 31
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் முருகன் அய்யனார் நேற்று தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சேர்த்து தரம் பிரிக்கும் குப்பை கிடங்கிற்கு சென்று பார்வையிட்டார் பின்பு தேரூர் பேரூராட்சிக்கு சென்று பேரூராட்சி ஊழியர்களை அழைத்து ஊர் பொதுமக்களிடம் பொது இடங்களில் மலஜலம் கழிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை பொது இடத்தில் வெடிப்பதால் காற்று மாசுபட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் பட்டாசுகளை பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் தெருக்களில் குப்பை சேரும் அளவிற்கு வெடிக்காமல் ஒதுக்கு புறமான இடங்களில் பட்டாசுகளை வெடிக்கவும்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு தெருவுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கூறினார் பின்பு செயல் அலுவலரும் பேரூராட்சி ஊழியருடனும் சென்று பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.