தருமபுரி மாவட்டம் கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு மற்றும் பல வழிகளை உயர்த்திய மக்கள் விரோத போக்கின் அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நகர செயலாளர்கள் தென்னரசு,சந்தோஷ்,ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .இதில் பாப்பிரெட்டிப்பட்டி
சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி,மாவட்ட சேர்மன் யசோதா மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு விடியா திராவிட முன்னேற்றக் கழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன பேரூறையாற்றினர்கள். இதில் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், விஸ்வநாதன்,சேகர் பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சி.எம்.ஆர். முருகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சரவணன்,கென்னடி மற்றும்
தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.