மதுரை செப்டம்பர் 26,
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
மதுரை மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் மன்றம் செப்டம்பர் 26 ந்தேதி காலை 10.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர், தலைவர் (பொறுப்பு) முனைவர் ஸோஃபியா இம்மானுவேல் மற்றும் நுகர்வோர் உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, வழக்கறிஞர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் மதுரை கே. புதூரில் உள்ள தமிழ் நாடு மின்பகிர்மான கழகத்தில் குறைதீர் கூட்டம் நடை
பெற்றது. இக்கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் / மேம்பாடு &மக்கள் தொடர்பு அலுவலர், அனிதா மரகதவல்லி , மேலூர் (கிழக்கு) செயற் பொறியாளர் கண்ணன், சமயநல்லூர் செயற்பொறியாளர் ஜெயலட்சுமி
திருமங்கலம் செயற்பொறியாளர் முத்தரசு, உசிலம்பட்டி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன்
துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் பாபநாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குறைதீர் மன்றத்திற்கு வரப்பெற்ற மனுக்களை தலைவர் மற்றும் உறுப்பினர் பரிந்துரை செய்து 32 மனுக்களையும் மனுதாரர் மற்றும் செயற் பொறியாளரிடம் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வை அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது