மதுரை ஜூன் 15,
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர் மன்றம் ஜூன் 15 ந்தேதி அன்று காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை மதுரை மின்பகிர்மான வட்டம் பொறிஞர் தலைவர் மங்களநாதன் மற்றும் நுகர்வோர் உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, வழக்கறிஞர் பிரேம் குமார் ஆகியோர் தலைமையில் கே. புதூரில் உள்ள தமிழ் நாடு மின்பகிர்மான கழகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற் பொறியாளர் உதவி செயற்பொறியாளர் அனிதா மரகதவல்லி மக்கள் தொடர்பு & மேம்பாடு, செயற் (பொது) பொறியாளர் ஸோஃபியா இமானுவேல், செயற் பொறியாளர் மேலூர் (கிழக்கு) கண்ணன், செயற் பொறியாளர் சமயநல்லூர் அசோக் குமார், செயற் பொறியாளர் திருமங்கலம் முத்தரசு, செயற் பொறியாளர் உசிலம்பட்டி வெங்கடேஸ்வரன், உதவி பொறியாளர் கூடல்நகர் கோபாலகிருஷ்ணன், துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் பாபநாசம், ஆகியோர்கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் குறைதீர் மன்றத்திற்கு வரப்பெற்ற மனுக்களை தலைவர் மற்றும் உறுப்பினர் பரிந்துரை செய்து 22 மனுக்களையும் மனுதாரர் மற்றும் செயற் பொறியாளரிடம் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வை அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.