சென்னை, ஜூலை-02, இந்தியாவின் மிகப்பெரிய மின் வாகன கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இந்தியா இ.வி 2024, என்ற பெயரில் நான்காவது மாநாடு
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
தொழில் நுட்ப வளர்ச்சியோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வை இணைத்திருக்கின்ற ஒரு எதிர்கால திட்டத்தை உருவாக்குவது மட்டுமே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இந்நாட்டின் மின்வாகன துறைக்கான இலக்குகள்,
மற்றும் கண்ணோட்டத்தை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு அறிக்கை, இந்தியா இ.வி 2024 நிகழ்வையொட்டி வெளியிடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில்
கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அலுவலர் வி.விஷ்ணு
ஜியோ பீபி– தலைமை செயல் அலுவலர் ஹரீஷ் மேத்தா, சிட்ராய்ன் இந்தியா பிராண்டு இயக்குனர் சுஷிர் மிஸ்ரா, இந்தோ – இத்தாலியன் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர். சௌரவ் மெஸெட்டி, ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர். அசோக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு மின்சார வாகனங்களின் எதிர்காலம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர்.
2000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த இரண்டு நாள் கண்காட்சியில் 120 கும் மேற்பட்ட
நிறுவனங்கள்பங்கு கொண்டன.
.
சிட்ராய்ன் இந்தியா பிராண்டு இயக்குநர் சிஷிர் மிஸ்ரா மாநாட்டின் தன் கருத்துக்களை தெரிவித்ததாவது:-
மின் வாகனங்கள் தொழில் நுட்ப உட்கட்டமைப்ப்புக்கு முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பதன் மூலம் மின்சார வாகனங்கள் தொழில்துறையில் உலகளவில் முதன்மை நாடாக இந்தியாவால் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மீது நாம் சிறப்பான கூர்நோக்கம் செலுத்த வேண்டும், தொழில்துறை பங்காளர்களோடு ஒத்துழைப்பை மேற்கொண்டு நீடித்த நிலைப்புத்தன்மை மீது தொடர்ந்து பொறுப்புறுதி கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிரான்சைஸ்இந்தியா.காம் நிறுவன நிர்வாக இயக்குநர். சச்சின் மரியா உறியதாவது:-
இந்தியா இ.வி கண்காட்சி நிகழ்வின் 4-வது பதிப்பு, உலகளாவிய ஆட்டோமோட்டிவ் தொழில்துறையில் மின்சார வாகனங்களுக்கான முக்கியத்துவத்துவம் வளர்ந்து வருவதற்கு ஒரு சாட்சியமாக திகழ்கிறது. தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து என்ற இலக்கை நோக்கி முன்னோக்கி செல்வதற்கு தொழில்துறையின் உற்பத்தி நிறுவனங்கள், வினியோகிப்பாளார்கள் மற்றும் ஆர்வலர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.சென்னையில் மாநகரில் இரண்டாவது நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவது ஆட்டோமோட்டிவ் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு
உறுதுணையாக விளங்குகிறது. என்று அவர் தெரிவித்தார்.
முதன்மை மையமாக இம்மாநகரம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. காட்சிப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களின் அணிவரிசை, காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிக நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிற முன்னேற்றங்களையும், மேம்பாடுகளையும் கண்டு நேரடி அனுபவம் பெறும்
தனித்துவமான வாய்ப்பை இதில் கலந்து கொள்பவர்கள் பெறுவார்கள் என்று கூறினார்.