சென்னை: ஜுன் 30, 2024:
சமையல் சாதனங்கள் உற்பத்தி துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்டவ் கிராஃப்ட், அதன் பிஜியன் பிராண்டின் கீழ், எலக்ட்ரிக் பிரஷர் – குக்கிங் சாதனத்தை ‘எலெக்ட்ரா’ என்ற பெயரில் சென்னை தெற்கு அகரம் ஜவஹர் நகரில் ஷோரூம் திறப்பு விழாவின் போது அறிமுகம் செய்தது.
ஸ்டவ் கிராஃப்ட் நிர்வாக இயக்குனர் . ராஜேந்திர காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எலெக்ட்ரா அறிமுகம் மூலம் சமையலறையில் இந்த நவீன சாதனம் என்பது, வெறுமனே சௌகரியத்தை வழங்குவது மட்டுமல்ல , இந்திய இல்லங்களில் சமையற்கலையின் செயல் தளத்தையே மாற்றியமைப்பது குறித்ததாகும்.
‘சமையல் அனுபவத்தை மேம்படுத்துகின்ற நவீன தொழில் நுட்பத்தை கொண்டு நுகர்வோர்கள் சமையல் அறிவை வளர்க்கவும்
நுகர்வோரின் தேவையறிந்து எலெக்ட்ரா எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் சாதனம் நேரத்தை மிச்சபடுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கண்காணிப்பு தேவைப்படாத இயக்கத்திறன்” அம்சம் இதில் இருப்பதால், இதை பயன்படுத்தும் நேரத்தில், வேறுபிற பணிகளைச் செய்ய பயனாளிகளுக்கு இது உதவிகரமாக இருக்கிறது.
சமையல் பணி நிறைவடைந்தவுடன் தானியங்கி ஆட்டோ சுவிட்ச் ஆஃப் வசதியும்
பிரஷர் குக்கர்களில் பொதுவாக காணப்படும் தொந்தரவான விசில் சத்தம் இல்லாமல் இருப்பதும்
விரும்புகின்ற நேரத்தில் உணவு தயாராக இருப்பதை உறுதி செய்ய இதன் டிலே ஃபங்ஷன் பயனாளிகளுக்கு பதற்றத்தை தணிக்கிறது.
கீப் வார்ம்’ நிலையில் 1 மணி நேர அளவிலிருந்து 3 மணி நேர கால அளவு வரை உணவை சுவை மாறாமல், பரிமாறுவதற்கு உரிய வகையிலும் ஏராளமான எளிதான இயங்கு வசதியுடன் எலெக்ட்ரா செயல்படுகிறது. எலெக்ட்ரா அறிமுகம் மூலம் சமையலறையில் முற்றிலுமாக புதிய மாற்றத்தையும் நவீனக்தையும் புகுத்துகிறோம் .
இந்த மிக நவீன சாதனம் என்பது, வெறுமனே சௌகரியத்தை வழங்குவது மட்டுமல்ல; இந்திய இல்லங்களில் சமையற்கலையின் செயல்தளத்தையே மாற்றியமைப்பது குறித்ததாகும்.
சமையல் அனுபவத்தை மேம்படுத்துகின்ற நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு நுகர்வோர்கள் திறனதிகாரம் பெறச்செய்வது என்ற குறிக்கோள் மீதான எமது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் இது திகழ்கிறது.” என்றார்