வேலூர்_05
வேலூர் மாநகரத்துக்குட்பட்ட சின்ன அல்லாபுரம் பகுதியில்
ஊர் நன்மைக்காக ஊரில் உள்ள சிறிய சிறிய குறைகளை தாங்களே தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ள இவர்களுக்குள்ளாக, ஊர் நாட்டாண்மை, ஊர் செயலாளர், ஊர் பொருளாளர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதுபோல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தினர்.
இந்தத் தேர்தலில், நாட்டாண்மைக்கான போட்டியில் செந்தில்குமார், சரவணன், மூர்த்தி ஆகியோர் வேட்பாளராகவும் ஊர் செயலர் பதவிக்கு சங்கர், சரவணன், பாபு ஆகியோரும் ஊர் பொருளாளர் பதவிக்கு மணிகண்டன், கருணாமூர்த்தி ஆகியோரரும் போட்டியிட்டனர்.