கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த என் .தட்டக்கல் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வட்ட செயலாளர் சின்ராஜ்,சாமூ தலைமையில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில்
என்.தட்டக்கல் மலைப்பகுதியில் அமைய உள்ள மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் கல் கோரை அனுமதியை ரத்து செய் வேண்டும் மற்றும் போச்சம்பள்ளி சுற்றுவட்டாலத்தில் மாம்பழம் விலை சரிவால் மக்கள் பாதிப்பு உள்ளார்கள் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். KRP. இடது கால்வாய் திட்டத்தை நிலம் வழங்கிய பயனாளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் உள்ளது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே செய்துவிட்டு நிறுத்தி விடுகிறார்கள் அதை விரிவு படுத்த வேண்டும் என இந்த கூட்டத்தில் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் போச்சம்பள்ளி விவசாயி சங்க வட்ட செயலாளர் கடல்வேந்தன் மற்றும் முருகன், கந்தன், சின்ராஜ், மாவட்ட செயலாளர் பிரகாஷ்ராஜ், ராஜ், அண்ணாமலை முருகேஷ், சின்னசாமி உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்