ராமநாதபுரம், ஜன.7-
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு திருவாடனை ஒன்றியம் நம்புதாளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணை நிர்வாகிகள் sp பட்டணம் சகுபர், பனைக்குளம் அசன், மாணவரணி மண்டல செயலாளர் பகத், நம்புதாளை நிஹ்மத்துல்லாஹ் ,இளைஞரணி செயலாளர் :யாசிர், மருத்துவ சேவை அணி செயலாளர் கலந்தர் , ஊடகப்பிரிவின் மாவட்ட பொருளாளர் சுல்த்தான் மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத்அலி முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டதில் தமுமுக மமக தலைவராக
சேகு நெய்னா*
தமுமுக செயலாளராக
ஜாசிர் அஹமது
மமக செயலாளரட
முஹம்மது சதாம் உசேன்
தமுமுக மமக பொருளாளராக
பர்வேஸ் முஷரஃப்
தமுமுக மமக துணை தலைவராக
ஆஃப்கான்
தமுமுக துணை செயலாளர்களாங
சேவை அலி
பாரிஸ்
மமக துணை செயலாளர்களாக
ராவுத்தர்,
செய்யது பாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கடந்து வந்த பாதைகள் பற்றியும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றியும் உரை நிகழ்த்தி நிர்வாகிகள் தேர்வு செய்தார். நம்புதாளை உயர்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவ மாணவிகள் படிக்கிறார்கள் நம்புதாளை பகுதி மக்கள் பயன் பெற நம்புதாளை உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் நம்புதாளை ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடடம் இல்லாமல் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் மக்கள் நலன் கருதி புதிய கட்டடடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நம்புதாளை கிளை தலைவர் ஷேக் நைனா நன்றி கூறினார்.