மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் காயம்பு சுமார் வயது 75 கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எல்லீஸ் நகர் பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் யாசகம் பெற்று சரவண பொய்கை பகுதியில் தஞ்சமடைந்தார்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் ஈச்சனூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியா மகன் சங்கரலிங்கம் வயது 50 இவர் சொந்த ஊரை விட்டு பிரிந்து திருப்பரங்குன்றம் பகுதியில் கூலி வேலைக்கு சென்று கொண்டு சரவணன் பொய்கையில் தங்கி இருந்தார். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்.
என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மது போதையில் வந்த சங்கரலிங்கம் முதியவர் காயபூவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் இந்த தகராறில் காயம்பூ கீழே விழுந்ததில் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் அதிகாலையில் சரவணப் பொய்கைக்கு குளிக்க வந்த பொதுமக்கள் இவரை கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்
தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சட்டையில் ரத்த கரையுடன் சுற்றி திரிந்த சங்கரலிங்கத்தை போலீஸார் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில் மேற்கண்ட குற்றவாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.