ஈரோடு ஜூலை 31
எழுமாத்தூர் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம கூட்டம் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது துணைத் தலைவர் தனபால் வரவேற்றார் பஞ்சாயத்து செயலாளர் லோகநாதன் தீர்மானத்தை வாசித்தார்
கூட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும் சுகாதாரத்தை பாதுகாக்கவும் வீடுகள் தோறும் கழிப்பறை கட்டுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இது பற்றி தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது எழுமாத்தூர் பஞ்சாயத்தில் வீடுகள் தோறும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது இதன் மூலம் கழிப்பறை பயன்படுத்துவதில் எழுமாத்தூர் பஞ்சாயத்து தன்னிறைவு பெற்ற கிராமமாக உள்ளது மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தங்கள் பகுதிக்கு சீரான குடி நீர் கிடைப்பதில்லை என்று கூறினர் எழுமாத்தூர் பஞ்சாயத்தில் 28 குக்கிராமங்கள் உள்ளன இதில் 26 குடிநீர் தொட்டிகள் ஏற்கனவே உள்ளன இன்னும் 2 குடிநீர் அமைக்க கேட்டு உள்ளோம் எழுமாத்தூர் பஞ்சாயத்தில் 75 சதவீதம் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்