தஞ்சாவூர்,அக்.16-
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
தஞ்சை மத்திய மாவட்ட, மத்திய ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணியமூர்த்தி, மனோகர், சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை.திருஞானம், அமைப்பு செயலாளர் காந்தி, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் துரை.வீரணன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அறிவுடைநம்பி, விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் எழுச்சியுடன் இருக்கும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது 100 நாட்கள் நீடிக்குமா? என பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அ.தி.மு.க. 52 ஆண்டுகளை கடந்து 53-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அ.தி.மு.க. என்றைக்கும் வளர்பிறை தான். தேய்பிறையே கிடையாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என பலர் நினைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் 2 மாதம் ஆட்சியை சிறப்பாக நடத்தினார். இப்போது அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை எழுச்சியுடன் வழிநடத்தி வருகிறார். 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இதனால் கட்சி பணிகளில் நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். இளைஞர்கள், பெண்களை அதிகஅளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். கூடுதல் எழுச்சியுடன் நிர்வாகிகள் தொண்டர்களை வழிநடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மருத்துவப்பிரிவு துணைச் செயலாளர் துரை.கோ.கருணாநிதி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட துணைச் செயலாளர் வெண்ணிலா பாலைரவி, மாவட்ட பொருளாளர் அன்புசெல்வன், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அவைத் தலைவர் சந்தானம், இணைச் செயலாளர் இந்திராகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி நன்றி கூறினார்.