தஞ்சாவூர் பிப்.24.
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சிந்தனை பேரவை சார்பில் முத்தமிழ் பித்தன் எழுதிய இசையின் எதிரொலிகள் என்ற நூல் வெளியீட்டு விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில மக்கள் சிந்தனை பேரவை துணைத் தலைவர் பேராசிரியர் கோ விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.மேனாள் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் கோ. சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் சண்முக செல்வ கணபதி நூலினை வெளியிட்டார். நூலின் பிரதிகளை கரந்தை தமிழ் சங்க செயலர். இரா. சுந்தரவதனம் ,மக்கள் சிந்தனை பேரவை பொதுக்குழு உறுப்பினர் நல்லாசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
வாழ்த்துரையாக தஞ்சாவூர் மாவட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க மேனாள் தலைவர் கோ.கலிய மூர்த்தி , அம்மாப்பேட்டை உக்கடை அப்பாவுத் தேவர் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் இரா. இராஜா மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள்
இசையின் எதிரொலிகள் நூலின் ஆசிரியர் முத்தமிழ் பித்தன் கா.ஆசைத்தம்பி ஏற்புரை வழங்கினார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட ரெட் கிராஸ் மேனாள் வைஸ் சேர்மன் குறள்நெறிச் செல்வர் கோ.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் தொகுப்புரையை மக்கள் சிந்தனை பேரவை பொதுக்குழு உறுப்பினர் கரந்தை கி .ஜெயக்குமார் செய்தார் நிறைவாக மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் .கோ. ராஜேந்திரன் நன்றி கூறினார்.