திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருவேற்காடு நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் இ.மாணிக்கராஜ் இல்லத் திருமண வரவேற்பு விழா திருவேற்காடு
ஜி.பி.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஜெகன் மூர்த்தியார் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் ஆவடி எஸ்.அப்துல் ரஹீம், திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.