சென்னை சோழிங்கநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட மேடவாக்கம் பள்ளிக்கரணை அரசன் காலனி போன்ற பகுதிகளுக்கு மின் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்கம்பம் பழுது அடைந்தது மீட்டர் அதிகமாக ஓடுவது மின்மாற்றி அமைப்பு பற்றி குறைகளை எடுத்து கூறினர். அதன் பின்பு செயற்பொறியாளர் தங்கள் குறைகளை வெகு விரைவில் செய்து முடிக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பெரும்பாக்கத்தில் உள்ள சேரன் நகரில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நடைபெற்றது பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.