ஈரோடு நவ 10
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள பிச்சைக்கார பள்ளம் ஓடை மற்றும் சுண்ணாம்பு ஓடையினை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் 8 ஓடைகள் உள்ளது. இந்த ஓடையில் செடிகள் மற்றும் மண் அதிக அளவில் படிந்து மழைக்காலங்களில் மழை நீர் விரைவாக செல்ல ஏதுவாக ஓடைகள் தனியார் பங்களிப்புடன் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள பிச்சைக்கார பள்ளம் ஓடை மற்றும் சுண்ணாம்பு ஓடையினை நேரில் சென்று பார்வையிட்டார். தூர்வாரப்பட்ட ஓடையினை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களிடம் குப்பைகளை ஓடைகளில் போடாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமெனவும் மற்றும் செடி கொடிகளை உடனுக்குடன் அகற்றி மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கு செல்லாமல் ஓடையில் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தார்கள்.