நாகர்கோவில் – நவ- 16,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது மின்சாரம் தடைபட்டு விழா மேடை இருளில் மூழ்கியதால் செல் போன் வெளிச்சத்தில் மீதமுள்ளவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்காமல் பாதியில் விழாவை விட்டு வெளியேறிய அமைச்சர் தங்கம் தென்னரசு … பயனாளிகள் அதிர்ச்சி .
கூட்டுறவு வார விழாவை ஒட்டி நாகர்கோயிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விழாவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் கூட்டுறவு தொடர்பான போட்டிகளில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் நலத்திட்ட உதவிகள் போன்றவை வழங்கப்பட்டன வழக்கமாக மண்டபங்களில் நடைபெறும் இந்த விழா வழக்கத்திற்கு மாறாக இந்த முறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்காலிக அரங்கம் தயார் செய்யப்பட்டு அந்த அரங்கில் நடைபெற்றது விழா சுறுசுறுப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட மின்தடை, அமைச்சர் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது சில நிமிடங்கள் வரை மின் தடை நீண்ட நிலையில் மீண்டும் மின்சார வெளிச்சத்திற்காக அதிகாரிகள் அங்கும் இங்கும் ஆக ஓடினாலும் மின் வெளிச்சம் கொண்டு வர முடியவில்லை இதற்கு இடையே அங்கு வந்த பயனாளிகளும் அதிகாரிகளும் பார்வையாளர்களும் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச் களை ஆன் செய்து சிறிதளவு வெளிச்சத்தை கொண்டு வந்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் வரை மின்தடை ஏற்பட்டு விழா சிறிது நேரம் முடங்கும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சிறுது நேர மின்தடைக்கு பின்பு நிகழ்ச்சி நடைபெற்றாலும் மின்தடைக்கு முன்னர் காணப்பட்ட உற்சாகம் அந்த விழாவில் இல்லாமல் போனது தான் அமைச்சரையே முகம் சுளிக்க வைத்தது. மேலும் உள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் செல் போன் வெளிச்சத்தில் விழாவில் பாதியில் வெளியேறிய அமைச்சரால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் . இந்த சம்பவத்திற்கு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர் . ஒரு திருமண மண்படம் அல்லது ஒரு கல்லூரியில் நடத்த வேண்டிய 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தியதே அரசின் தவறான செயல் என்று நாகர்கோவில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.