பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகர், ஓம்சக்திநகர், சேதுபதிநகர் ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை
ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.சித்ராமருதுநேரில் சென்று பார்வையிட்டார். போர்க்கால அடிப்படையில் தேங்கியுள்ள மழைநீரை வெகு விரைவாக வெளியேற்ற டீசல்,பெட்ரோல் இன்ஜின் மோட்டார்கள், டேங்கர்கள் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில்
மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்,
மண்டபம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இராஜேந்திரன், கண்ணன், முரளி ஊராட்சி செயலாளர் வினோத்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.