மார்ச் :23
லட்சியம் லைப் கேர் ட்ரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய 4 ஆம் ஆண்டு துவக்க விழா தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மேலாளர் நிர்மல், சைக்காலஜிஸ்ட் (உளவியலாளர்) சே. மீனா, பொது மருத்துவர் சீனிவாசன், சிறப்பு அழைப்பாளர் சைக்கியாட்ரிஸ்ட் தனராஜ் சேகர், மற்றும் ஊழியர்கள் செல்வி உதயந்தி, செல்வி மஞ்சுளா, செல்வி சந்தியா, கௌரி, புவனேஷ், திருமதி பூர்ணிமா ஆகியோர் உடன் இருந்தனர். குடிபோதையில் இருந்து மீட்கப்பட்ட தோழர்களுக்கு மெடல் மற்றும் பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் குடி போதை மற்றும் மறுவாழ்வு மையத்தில் முற்றிலும் மாறுபட்ட சிகிச்சை வழங்குவது, மருத்துவ சேவை, உணவு, நடைப்பயிற்சி,
விளையாட்டு, தியானம்,
உடற்பயிற்சி, மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை சிறப்பான முறையில் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் தொடர்புக்கு 9600644475..9600644476 எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்..