வேலூர்=09
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்பாடி போலீசார்
இதில் காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் மற்றும் ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் பங்கேற்றனர்.
டிஎஸ்பி பழனி கூறுகையில்
காட்பாடியில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை மற்றும் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகிய இவற்றை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
இதைப் பற்றிய உங்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
அதேபோல் குற்றங்களை தடுப்பதிலும் பொதுமக்கள் பங்கு உள்ளது தங்கள் பகுதியில் புதிதாக நடமாடும் நபர்கள் குறித்து சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்தும் தெரிவித்தால் அவர்கள் பற்றி போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் சமூக வலைதளங்களில் தவறான செயல்களில் ஈடுபடுவதையும் மற்றும் பெற்றோர்கள் செல்போன் கேட்டால் குழந்தைகள் கொடுக்க மறுத்தால் அது தவறான செயலில் ஈடுபடுவதாக என கருத்தில் கொள்ள வேண்டும் என பேசினார்.