கரூர் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.
சென்னை போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று துவங்கி வைத்தார்…
இதையடுத்து, போதை தடுப்புக்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் முதல்வரின் உரையானது, முழுக்க முழுக்க அறிவுரைகளாகவே இருந்ததுடன், கவலையும், அக்கறையும் அவரது பேச்சில் வெளிப்பட்டதையும் அனைவராலும் நன்கு உணர முடிந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக கடைப்பிடித்து
வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில்
கரூர் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் கலந்து கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி காவல்துறை சார்பில் துண்டு பிரச்சாரங்கள் மாணவர்கள் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.