தென்தாமரைகுளம்., அக். 27.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை உதவி ஆணையர் ரோட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு கருத்துரை வழங்கினார். .மருத்துவர் ஆன்ஸி போதைபொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி பேசினார். கருத்தரங்கில் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் டாக்டர் .ஆர். தர்மரஜினி,தமிழ் துறை பேராசிரியர் அ.செந்தில் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் கப்பல் படை அதிகாரி ஆ. பிரபு மாறச்சன் செய்திருந்தார். கருத்தரங்கில் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .