சங்கரன்கோவில். ஆக.13.
தமிழ் நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக
சங்கரன் கோவில்
ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க 200 மாணவ மாணவியர்கள் மற்றும் 20 ஆசிரிய பெருமக்கள் உறுதிமொழி பின்பற்றி வாசித்தனர். நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார்.ராஜா ஆர் டி ஓ கவிதா, ஏடிஎஸ்பி ரமேஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார். இதில் டிஎஸ்பி சீனிவாசன், நகராட்சி கமிஷனர் சபாநாயகம், வட்டாட்சியர் பரமசிவம், கல்வித்துறையின் சார்பில் மாவட்ட முதன்மை கண்காணிப்பளர் அலுவலக துணை ஆய்வாளர் சுப்புலெட்சுமி, மாவட்ட தொடக்க கல்வி கண்காணிப்பாளர் வேல்சாமி, மாவட்ட திட்டக் கல்வி திட்ட அலுவலர் மீரான் மைதீன், வட்டார கல்வி அலுவலர்கள் அந்தோணி ராஜ், செல்வபாக்கிய சாந்தினி, ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குநர் ராஜேஷ்கண்ணா, பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் , நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், காவல் ஆய்வாளர் மாதவன், திமுக மாவட்ட பொருளாளர் சரவணன் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் வெங்கடேஷ், ஜெயகுமார், வீரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்