அரியலூர், செப்;04
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து,
ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான் ஊராட்சியில் ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் ரூ.42 இலட்சம் கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகள், குடிநீர் வசதிகள், பள்ளி வகுப்பறை கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்து, தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
அதன்படி செந்துறை ஒன்றியம், இருங்களாக்குறிச்சி கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், பின்னர், ஆதனக்குறிச்சி கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், அதனைத்தொடர்ந்து கோட்டைக்காடு கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மணக்குடையான் ஊராட்சியில் ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பூண்டி கிராமத்தில் 30 குடியிருப்புகள், சோழன்பட்டி கிராமத்தில் 35 குடியிருப்புகள், மணக்குடையான் கிராமம் நேரு நகரில் 35 குடியிருப்புகள் என மொத்தம் 100 குடியிருப்புகளுக்கு கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிசள்) பழனிசாமி, ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவர் (உற்பத்தி) மீனாட்சி சுந்தரம், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன்,ஜாகீர் உசேன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்