மதுரை மார்ச் 6,
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிட்டாபட்டியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பைப் லைன் விஸ்தரிப்பு மற்றும் சின்டெக்ஸ் அமைத்து கலையரங்கம் மராமத்து பணி, கதிர் அடிக்கும் களம் விரிவாக்கம் செய்தல், மயானத்துக்கு எரிமேடை அமைக்கும், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கூடுதல் ஆட்சியர் மரு.மோனிகா ராணா, ஆகியோர் உடன் உள்ளனர்